மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2024.11.25 ஆம் திகதிய இலக்கம் 2412/08 விசேட வர்த்தமானி மூலம் நிறுவப்பட்டது. இந்த அமைச்சு சமூக வலுப்படுத்துகை பிரிவு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரிவு என்னும் இரு பிரிவின் கீழ் இயங்குகின்றது.
அமைச்சின் முக்கிய பணிகள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு.
• அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற தேசிய கொள்கைகள் மீது அமைந்து, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை விடயப்பரப்புடன் மற்றும் அமைச்சுடன் இணைந்த திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபைகள் மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களின் விடயப்பரப்பு தொடர்பான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்களைத் தொகுத்தல், அமுல்படுத்துதல், பின்தொடர்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
• அமைச்சின் விடயப்பரப்பு தொடர்பான பொதுமக்கள் சேவைகளை திறமையான மற்றும் மக்கள்நேய முறையில் வழங்குதல்.
• ஊழலையும் விரயத்தையும் நீக்கும் அதே வேளையில் அமைச்சின் செயல்பாடுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் நவீன முகாமைத்துவ நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து ஒழுங்களையும் நடைமுறைகளையும் சீர்திருத்துதல்.
• அரச விவகாரங்கள் மற்றும் அரசியல் துறையில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்.
• முரண்பாடுகள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை பலப்படுத்துதல் மற்றும் அமுல்படுத்துதல்.
• பாலியல் மற்றும் ஆண் பெண் பால்நிலை சமத்துவ அடிப்படையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்.
• பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்.
• மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் தொடர்பாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றுதல்.
• முன்பள்ளிகளுக்கு தேசிய கொள்கையைத் தயாரித்து அமுல்படுத்துதல்.
• உடல் மற்றும் உளரீதியாக ஆரோக்கியமான பிள்ளைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குதல்.
• பாதுகாப்பற்ற பிள்ளைகளின் உரிமையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிகழ்ச்சித்திட்டம் மற்றும் செயற்றிட்டங்களை உருவாக்குதல் மற்றும் அமுல்படுத்துதல்.
• சிறுவர் சமவாயத்தை அமுல்படுத்துதல்.
• சிறுவர் பராமரிப்பு நிலையத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல்.
• செவன சரண வளர்ப்பு-பெற்றோர் திட்டத்தை அமுல்படுத்துதல்.
• விதிவிலக்கான திறமையான சிறுவர்களின் திறனை மேம்படுத்த நிதி உதவி வழங்குதல்.