சுஹுருலிய 2.0 - உபாயத்திட்டங்களை தயாரிப்பதற்கான ஆலோசனை செயலமர்வு
உபாயத்திட்டங்களை தயாரிப்பதற்கான ஆலோசனை செயலமர்வு 2023.05.15 ஆம் திகதி இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான பங்காளி நிறுவனங்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் அதிகாரிகளும் சுஹுருலிய 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்து அமுல்படுத்துவதற்குப் பங்களிப்பு வழங்கினர்.
இந்த மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் ஊடாக, பெண் தொழில் முயற்சியாளர்கள் மாத்திரமன்றி, இலங்கையிலுள்ள சகல மகளிர் சங்கங்களதும் தகவல் தொழில்நுட்பத் தேவைகளைக் கண்டறிந்து மற்றும் அவற்றை அடைவதற்கான வசதிப்படுத்தும் வழிமுறைகளையும் தயாரிப்பார்கள்.