சமீபத்திய செய்தி

சிறுவர்களை மையப்படுத்திய பேரிடர் ஆபத்துக் குறைப்பு நிகழ்ச்சித்திட்டம்

news-banner

நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தை அங்கீகரித்த ஒரு நாடாக சிறுவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பைப் பெறுவதற்காக அமுல்படுத்தப்படும் பிரதானமான நிகழ்ச்சித்திட்டங்களில் சிறுவர் கழக நிகழ்ச்சித்திட்டமும் ஒன்றாகும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களை விருத்தி செய்வதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சிறுவர்களை மையமாகக் கொண்ட பேரிடர் ஆபத்துக் குறைப்பு நிகழ்ச்சித்திட்டமும் அவற்றில் அடங்கும். UNICEF இன் நிதியுதவியுடன், பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் சிறுவர்கள் தலைமையில் சிறுவர்களை மையப்படுத்திய பேரிடர் ஆபத்துக் குறைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், அதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பட்டு உத்தியோகத்தர்கள் / உதவியாளர்கள் இச்சிறுவர்களை வழிநடத்துகின்றனர். 

இந்த செயற்றிட்டங்களில், 2023 அக்டோபர் 01 ஆம் திகதி நடைபெற்ற உலக சிறுவர் தின நிகழ்ச்சிக்கு இணையாக மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த நிகழ்ச்சித்திட்டம்  உலக சிறுவர் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வில் பாராட்டப்பட்டது. அதன்படி, அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் உத்தியோகத்தர்களை மதிப்பீடு செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்று 2023 டிசம்பர் 18 ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. 

மேலும், சிறுவர்களை மையப்படுத்திய பேரிடர் ஆபத்துக் குறைத்தல் எண்ணக்கரு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதன் நவீன போக்குகள் என்ற தலைப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. மிஹிலார் மொஹமட் அவர்களின் வளப்பங்களிப்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திரு. எம்.எச்.ஜி. பண்டார, பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி. யஷிகா பீரிஸ் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.