சமீபத்திய செய்தி
ஜனநாயகம் என்பது ஒரு சிலரின் சலுகை அல்ல, மாறாக அது அனைவருக்குமான பிறப்புரிமை
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ், இலங்கை தூதுக்குழுவுடன், 68ஆவது பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாட்டின் ஓரத்தில் நடைபெற்ற 3ஆவது லிஃபாகா சொற்பொழிவில் பங்கேற்றார்.
பார்படாஸ் பிரதமர் கௌரவ மியா அமோர் மோட்லி, எஸ்சி, எம்.பி.யின் தாராள பங்களிப்புடன் நடத்தப்பட்ட இந்த ஆண்டு சொற்பொழிவு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் பாராளுமன்றங்களின் பங்கு மற்றும் சிறிய தீவு நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியான தாக்கம் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியது.
பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் லிஃபாகா சொற்பொழிவுத் தொடர் 2023 இல் ஊPயு சர்வதேச நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவரும் கேமரூனின் துணை சபாநாயகருமான மறைந்த கௌரவ எமிலியா மோன்ஜோவா லிஃபாகாவின் நினைவாகத் தொடங்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுனில் பொதுநலவாயப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சிறப்பாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.