சமீபத்திய செய்தி

SGBV 2024 - 2028 பல்துறை செயற்பாட்டுத் திட்ட உருவாக்கத்திற்குரிய செல்லுபடியாக்கல் செய்யும் செயலமர்வு

news-banner

2024-2028 பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான வரைவு செய்யப்பட்ட தேசிய செயற்றிட்டத்தின் பிரிவுகளுக்கு இடையேயான செல்லுபடியாக்கல் செய்யும் செயலமர்வு 2023 அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் திகதி BMICH இல் துறைசார் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது. இந்தத் துறைகளுக்கிடையேயான செல்லுபடியாக்கல் செய்யும் செயலமர்வின் நோக்கங்கள்:

பின்நூட்டல் மற்றும் செல்லுபடியாக்கல்களுக்கான துறைத் திட்டங்களின் துறைகளுக்கு இடையேயான பகிர்வை வசதிப்படுத்தல்   

நகல்  தேசிய செயற்றிட்ட கண்காணிப்பு மாதிரி / முறைமை பற்றிய பின்நூட்டல்களைப் பெற, மற்றும் 

துறைசார் அமைச்சுக்களின் கூட்டு  நிகழ்ச்சித்திட்டம் / நடவடிக்கையை ஆராய.

இந்த முன்மொழியப்பட்ட செயற்றிட்டம் 18 துறை சார்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் உட்பட 13 துறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சகல துறைசார் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்களும் அங்கு இருந்தனர் மற்றும் அவர்கள் குழுவில் மாற்றங்களின் தொடர்புடைய கோட்பாட்டை முன்வைத்தனர். இதேபோல், பல கொத்தனிக் குழு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, அதைத் தொடர்ந்து பின்நூட்டல் மற்றும் செல்லுபடியாக்கல்களுக்கான சமர்ப்பித்தல்கள் முன்வைக்கப்படடன.   

தேசிய செயற்றிட்ட கண்காணிப்பின் சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் SGBV ஒழித்தல் 2024 – 2028 க்கான இந்த தேசிய செயல் திட்டத்திற்கான வரைவு கண்காணிப்பு மாதிரி சமர்ப்பித்தல்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. 

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதி வதிவிடப் பிரதிநிதி ஆகியோரின் பெறுமதிமிக்க இரண்டு உரைகளினால் செயலமர்வு ஒளிவுபெற்றது. முழு நிகழ்ச்சித்திட்டமும் UNDP மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உதவியது.






logo