சமீபத்திய செய்தி

சர்வதேச மகளிர் தினம்

news-banner

சர்வதேச மகளிர் தினம்

வேலை செய்யும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளல், சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளல், வாக்குரிமை மற்றும் சிறுவர் ஊழியத்திற்கு எதிராக பேரணி வகுத்துச் சென்றமை காரணமாக, ஆடைத் தொழிலில் உள்ள 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் 1908 ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கத்தின் மூலம் சர்வதேச மகளிர் தினம் உருவானது.

அதன்பிறகு, 1909ல், முதல் மகளிர் தினம் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியால் பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, 1910 இல் கோபன்ஹேகனில் நடந்த வேலை செய்யும் பெண்களுக்கான சர்வதேச காங்கிரஸில், ஒரு கம்யூனிஸ்ட் ஆர்வலரும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடும் கிளாரா ஜெட்கின், மகளிர் தினத்தை சர்வதேச தினமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். மாநாட்டில் தீர்மானத்தை 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். சர்வதேச மகளிர் தினம் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் முதலாவது கொண்டாட்டத்தின் கருப்பொருள் ``கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்தைத் திட்டமிடுதல்'' என்பதாகும்.

2011ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, 2024ம் ஆண்டு 113வது ஆண்டு மகளிர் தின விழா கொண்டாட்டமாகும்.

ஏனைய பல கொண்டாட்டங்களைப் போலல்லாமல், மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரே பொதுவான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம் போன்ற எந்தப் பிரிவினையும் இல்லை, மேலும் பெண்களுக்கான தடைகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

1978ஆம் ஆண்டு இலங்கையில் முதன்முறையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அன்று தொடக்கம், இந்த அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களில் தேசிய கொண்டாட்டம் மற்றும் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பெண்களை வலுவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் 'பெண்களின் முதலீட்டின் மூலம் விரைவான முன்னேற்றம்', அதே நேரத்தில், 'அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்' என்பது தேசிய கருப்பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கொண்டாட்டமானது 2024 மார்ச் 08 ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் வழிகாட்டலில் மார்ச் 08 ஆம் திகதிக்கு முன்னரும் அதன் பிற்பாடும் பல சமகால வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

-       2024, மார்ச் 08