சமீபத்திய செய்தி
ஆவண முகாமைத்துவம் மற்றும் தரவு சேகரிக்கும் எளிய முறையொன்றை அறிமுகப்படுத்துதல்
திட்டமிடல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஊடாக அமைச்சின் நாளாந்த அஞ்சல், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் நேரடியாக ஒப்படைப்பதன் மூலம் பெறப்படும் கடிதங்களை முறையாகப் பேணி வருவதை வலியுறுத்தி, அனைத்து துறைகளுக்கும் ஒரே முறைமையை அறிமுகப்படுத்த 2023.08.11 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதவிர, KOBO மென்பொருளைப் பயன்படுத்தி விசேடமான தகவல்களைச் சேகரிப்பதற்கு வசதியாக, திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு அடிப்படையான அறிவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
செயலாளரின் பணிப்புரையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், திணைக்களத் தலைவர்கள் உட்பட சுமார் எழுபது விடயப் பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், மேலதிக நடைமுறைப் பயிற்சிகளும் குழுக்களாக வழங்குவதற்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அரச செலவினங்களை முகாமை செய்து புதிய முறைமைகள் ஊடாக தரமான மற்றும் உகந்த முறையில் அத்தியாவசிய கடமைகளைச் செய்வது இதன் அடிப்படை நோக்கமாகும்.