சமீபத்திய செய்தி
பாலின அடிப்படையிலான வன்முறையைத் ஒழிப்பதற்கான உபாயத்திட்ட அபிவிருத்தி செயலமர்வு
பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான உபாயத் திட்டங்களை உருவாக்குவதற்கான இரண்டு நாள் செயலமர்வொன்றை பல்வேறு அரச பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச வளவாளர்களுடன் இணைந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கொழும்பு - 02 கோர்ட்யார்ட் மேரியட் ஹோட்டலில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் தலையீடுகளைத் தெரிவிக்கும் பல்துறை தடுப்பு மூலோபாயத்தை உருவாக்குவதன் மூலம் SGBV ஐ ஒழிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை அறிவிப்பதே இந்த செயலமர்வின் ஒட்டுமொத்த நோக்கமாகும்.
SGBV தடுப்பு மற்றும் அதற்குப் பதிலளிப்பதற்கான முக்கிய தேசிய நிறுவனமாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, இந்த செயலமர்வு வெற்றிபெற பங்களித்துள்ளது.