சமீபத்திய செய்தி

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் - 2024

news-banner

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சின் ஏற்பாட்டில் "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின விழா கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா சமன்மலி குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் 08.03.2024 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.

தெரிவு செய்த 5 பெண் காப்பகங்களுக்கு 05 முச்சக்கரவண்டிகள் மற்றும் 05 கணனிகள் பகிர்ந்தளித்தல், Forever நிறுவனம் மூலம் ரூ. 150,000 அடிப்படையில், 03 புலமைப்பரிசில்கள் வழங்கிவைத்தல், சமுர்த்தி கடன் சான்றிதழ் நன்கொடைகள் மற்றும் அன்பளிப்பு நன்கொடைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இவ்வைபவத்தில் இடம்பெற்றன.

இந்த சந்தர்ப்பத்தில் கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த, கௌரவ வனஜீவராசிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சட்டத்தரணி திருமதி. பவித்ரா தேவி வன்னியாராச்சி, கௌரவ தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார, கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் விஷேட வைத்திய நிபுணர். திருமதி. சீதா அரம்பேபொல, கௌரவ சமூக வலுப்படுத்துகை இராஜாங்க அமைச்சர் திரு. அநூப பெஸ்குவல், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. வஜிர அபேவர்தன, Forever நிறுவனத்தின் தலைவி திருமதி. சாந்தனி பண்டார, அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தூதுவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.