சமீபத்திய செய்தி
உலக சிறுவர் தினம் - 2025
உலக சிறுவர் தினம் - 2025
இலங்கை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01ஆம் திகதி மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் தலைமையிலே தேசிய நிகழ்ச்சியாக உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுகிறது. இவ்வாண்டு உலக சிறுவர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் “உலகை வழி நடாத்த - அன்பால் போஷியுங்கள்” என்பதாகும்.
அதன்படி, 2025.10.01 அன்று, கௌரவ பிரதமர் தலைமையிலே அலரி மாளிகையில் சிறுவர்கள் 350 பேர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் 700 பேர் வரையில் பங்கேற்கும் தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேசியக் கொண்டாட்டத்துடன் இணைந்து செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 01 வரை சர்வதேச சிறுவர் தினத்திற்கான தேசிய வாரமாக அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வாரத்தில், சிறுவர் பிரிவுடன் தொடர்புடைய மற்றும் நேரடியான சிறுவர் அமைப்புகளுடன் இணைந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத் திட்டமானது சிறுவர் உணர்திறன் மற்றும் சிறுவர் நட்புச் சமூகத்தை உருவாக்க உதவும்.