நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்

தேசிய கொள்கைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்க திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது, சகல பிள்ளைகளினதும் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் அனாதை, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பிள்ளைகள் மற்றும் சட்டத்திற்கு முரண்படும் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட கவனத்துடன் சம வாய்ப்புகளை வழங்குகிறது. சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கும் அபிவிருத்திக்கும் சிறுவர் உரிமையை உறுதி செய்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், தேவைப்படும் சிறுவர்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்குதல், மாகாண சபைகளுடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகளை ஒருங்கிணைத்தல், சிறுவர் இல்லங்களைப் புதுப்பித்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல், வளர்ப்பு பராமரிப்பு சேவைகள் வழங்குதல் திணைக்களத்தின் முக்கியமான நிகழ்ச்சித்திட்டங்களில் சிலவாகும். சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள், சிறுவர் கழகங்கள் / சிறுவர் கவுன்சில் நிகழ்ச்சித்திட்டம், சிறுவர்கள் தலைமையிலான ஆய்வுகள் மற்றும் சிறுவர்களை மையமாகக் கொண்ட இடர் ஆபத்தைக் குறைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. 

எமது தொலை நோக்கம்

சிறுவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் தொடர்பில் உணர்வுப்பூர்வமானதுமான சமூகம்.

எமது செயற்பணி

தேசிய கொள்கைகள்இ சர்வதேச நியமங்களுக்கு அமைய அநாதைகள்இ கைவிடப்பட்ட மற்றும் அநாதரவான சிறுவர்களையும் சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள சிறுவர்களையும் விசேடமாகக் கொண்டு சகல சிறுவர்களினது உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு சமமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல.

www.probation.gov.lk